முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனியிடம் இருந்து பாடம் கற்றேன்: கோக்லி பேட்டி

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 1 - நெருக்கடியான நேரத்தில் எப்படி திற மையாக செயல்படுவது என்பது பற்றி தோனியிடம் இருந்து பாடம் கற்றேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோக்லி தெரிவித்தார். 

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர மாக விராட் கோக்லி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் உள்ளனர். இருவரும் தற்போது ஒரு நாள் தொடரில் நன்கு ஆடி வருகின்றனர். 

கோக்லிக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆனால் திறமையுள்ள அவருக்கு இன் னும் முதிர்ச்சி போதாது, எனவே அவ ருக்கு கேப்டன் பதவி அளிக்க இன்னும் சில காலம் ஆக வேண்டும் என்று மற்றொரு சாரார் கூறி வருகின்றனர். 

சென்னையில் பூஸ்ட் விளம்பர நிறுவனம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் பங்கே ற்ற கோக்லி நிருபர்களுக்கு அளித்த பே ட்டியின் போது மேற்கண்டவாறு கூறி னார். 

ஆரோக்கிய பானமான பூஸ்ட் நிறுவனத்தில் இந்திய அணி கேப்டன் தோனி, டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஆகி யோர் விளம்பர தூதர்களாக இருந்து வருகின்றனர். 

தற்போது அந்த வரிசையில் விராட் கோக்லியும் இணைந்து உள்ளார். பூஸ் ட் நிறுவனத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. 

விராட் கோக்லியுடன், கேப்டன் தோ னி, சேவாக், முன்னாள் கேப்டன் கும் ப்ளே, முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியின் போது, இடையே நிருபர்களைச் சந்தித்த கோக்லி அவர்க ளிடம் தெரிவித்தாவது - 

பூஸ்ட் நட்சத்திர வரிசையில் நானும் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது திறமை மீது ரசிகர்கள் வைத்திரு க்கும் நம்பிக்கையை இது வெளிப்படுத் துகிறது. 

கேப்டன் தோனி ஆடுகளத்தில் அமை தியாக நடந்து கொள்ளும் முறை என் னைக் கவர்ந்தது. நெருக்கடியான நேரத் தில் எப்படி செயல்படவேண்டும் என்ற பாடத்தை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். 

நான் சாதனையாளராக இருக்க விரும் புகிறேன். நான் இன்னும் சாதிக்க வே ண்டியுள்ளது. இந்திய அணிக்காக அதிக மான போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுப்பேன் என்று நம்புகிறேன். 

நெருக்கடி மற்றும் சவால்கள் என்பது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது. அதையும் தாண்டி சிறப்பாக ஆடுவது தான் வீரரின் செயல்பாடாகும். இவ் வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago