முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் அருகே விபத்து - 6 பேர் பலி: அமைச்சர் நேரில் ஆறுதல்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

ஒசூர் பிப்.15 - ஓசூர் சூளகிரி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 6 பேர் பலியாயினர்.40 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி,மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லகான கொத்தம்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சப்படி கிராம பகுதியில் நேற்று மதியம் 1.30 மணியளவில் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி ஆவின் பால்பண்ணைக்கு ஓசூர் பகுதியில் சேகரிக்கப்பட்ட பாலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.லாரியை கிருஷ்ணகிரி ஆவின் நகரைச் சேர்ந்த ராஜூ(56) என்பவர் ஓட்டிச் சென்றார். அதே வேளையில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. சப்படி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் சுமார் 1 கி மீ தூரத்திற்கு ஒரே சாலையில் வாகனங்கள் செல்லும் சூழ்நிலை உள்ளது. 

சப்படி கிராம பகுதியில் லாரியும்-பஸ்சும் வந்த போது ஒரு வளைவில் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. இதில்  ஆவின் லாரி டிரைவர் டிரைவர் ராஜூ(56)  ஆந்திரா குப்பம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(40),  பர்கூரைச் சேர்ந்த சேகர்(50), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தகாசிநாதன்(53)) தேன்கனிக்கோட்டை தேவகானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி(53), ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன்(40),

 பெரியாம்பட்டி வெங்கடேஷ்(40),கிருஷ்ணகிரி செக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜா(60),கோ  வையை சேர்ந்த பாலசுப்பிரமணி(45), திருப்பத்தூர் மணிகண்டன்(20) ஓசூர் மருதையன்(57), கிருஷ்ணகிரி ஓல்ட் பேட்டையைச் சேர்ந்த பசில்(40), காட்பாடி,ஏழுமலை(49), பெங்களூர் சிவாஜி நகரைச் சேர்ந்த சபி(41), கிருஷ்ணகிரி,விமலா(37), கோவிந்தப்பள்ளி,குப்பம்மாள்(37), திருப்பத்தூர் பெரியசாமி(50), கிருஷ்ணகிரி,செல்வம்(25) ஒரிசா,ஜிஜேந்திரா(24) தேன்கனிக்கோட்டை,தியாகராஜன்(40) தேவகானப்பள்ளி, தேவீரம்மா(60) உள்பட 46 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர். உடனே  அப்பகுதி கிராம மக்கள்  இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். இது குறித்து சூளகிரி போலீசாருக்கும்,108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரவின் பி.நாயர் மற்றும் போலீசாரும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் ஆவின் லாரி டிரைவர் ராஜூ மற்றும் தேவனானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி ஆகியோர்  இறந்து போயினர். இதில் 25 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் 19 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், பர்கூரைச் சேர்ந்த சேகர், திருப்பத்தூரைச் சேர்ந்த காசிநதான், ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போயினர்.

விபத்து நடந்த இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் சில மணி நேரம் போக்குரவத்தும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று இரவு கிருஷ்ணகிரி வந்தவர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்