எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒசூர் பிப்.15 - ஓசூர் சூளகிரி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 6 பேர் பலியாயினர்.40 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி,மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லகான கொத்தம்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள சப்படி கிராம பகுதியில் நேற்று மதியம் 1.30 மணியளவில் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி ஆவின் பால்பண்ணைக்கு ஓசூர் பகுதியில் சேகரிக்கப்பட்ட பாலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.லாரியை கிருஷ்ணகிரி ஆவின் நகரைச் சேர்ந்த ராஜூ(56) என்பவர் ஓட்டிச் சென்றார். அதே வேளையில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. சப்படி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் சுமார் 1 கி மீ தூரத்திற்கு ஒரே சாலையில் வாகனங்கள் செல்லும் சூழ்நிலை உள்ளது.
சப்படி கிராம பகுதியில் லாரியும்-பஸ்சும் வந்த போது ஒரு வளைவில் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. இதில் ஆவின் லாரி டிரைவர் டிரைவர் ராஜூ(56) ஆந்திரா குப்பம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(40), பர்கூரைச் சேர்ந்த சேகர்(50), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தகாசிநாதன்(53)) தேன்கனிக்கோட்டை தேவகானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி(53), ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன்(40),
பெரியாம்பட்டி வெங்கடேஷ்(40),கிருஷ்ணகிரி செக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் ராஜா(60),கோ வையை சேர்ந்த பாலசுப்பிரமணி(45), திருப்பத்தூர் மணிகண்டன்(20) ஓசூர் மருதையன்(57), கிருஷ்ணகிரி ஓல்ட் பேட்டையைச் சேர்ந்த பசில்(40), காட்பாடி,ஏழுமலை(49), பெங்களூர் சிவாஜி நகரைச் சேர்ந்த சபி(41), கிருஷ்ணகிரி,விமலா(37), கோவிந்தப்பள்ளி,குப்பம்மாள்(37), திருப்பத்தூர் பெரியசாமி(50), கிருஷ்ணகிரி,செல்வம்(25) ஒரிசா,ஜிஜேந்திரா(24) தேன்கனிக்கோட்டை,தியாகராஜன்(40) தேவகானப்பள்ளி, தேவீரம்மா(60) உள்பட 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர். உடனே அப்பகுதி கிராம மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். இது குறித்து சூளகிரி போலீசாருக்கும்,108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரவின் பி.நாயர் மற்றும் போலீசாரும், அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் ஆவின் லாரி டிரைவர் ராஜூ மற்றும் தேவனானப்பள்ளியைச் சேர்ந்த அமராவதி ஆகியோர் இறந்து போயினர். இதில் 25 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் 19 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், பர்கூரைச் சேர்ந்த சேகர், திருப்பத்தூரைச் சேர்ந்த காசிநதான், ஆந்திர மாநிலம் கூடுப்பள்ளியைச் சேர்ந்த பாலன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போயினர்.
விபத்து நடந்த இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் சில மணி நேரம் போக்குரவத்தும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று இரவு கிருஷ்ணகிரி வந்தவர் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? இன்று கட்டாக்கில் 2-வது போட்டி
08 Feb 2025கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? என்ற ஆவல் ரசிகர்கள் இடையே மேலோங்கும் நிலையல் இன்று கட்டாக்கில் 2-வது போட்டி நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-02-2025.
08 Feb 2025 -
தட்டச்சர் பணிக்கு கலந்தாய்வு பிப்ரவரி 24 முதல் தொடங்கும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
08 Feb 2025சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்
-
டில்லி தேர்தலில் முதல்வர் அதிஷி வெற்றி கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி
08 Feb 2025புதுடில்லி: டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் டில்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றார்.
-
இன்டியா கூட்டணி ஒற்றுமையாக டெல்லி தேர்தலை சந்திக்கவில்லை மதுரையில் திருமாளவன் பேட்டி
08 Feb 2025மதுரை: இன்டியா கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் 2026 சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கருத்து
08 Feb 2025ஈரோடு: “இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, தி.மு.க.
-
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம்: அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
08 Feb 2025சென்னை: தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணம்?
08 Feb 2025புது டில்லி: புது டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு, அக்கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.
-
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவிப்பு
08 Feb 2025காலே: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்துள்ளது.
2-வது டெஸ்ட்...
-
அம்மா மருந்தகங்கள் மூடலா? ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
08 Feb 2025சென்னை: தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடு
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது
08 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது கூட்டத்தில் விரைவில் தாக்கலாகும் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுகிறது.
-
தங்கம் விலை சற்று உயர்வு
08 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனையானது.
-
அலாஸ்கா விமானம் விழுந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு
08 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208 பி என்ற விமானம் புறப்பட்டது.
-
வள்ளலாரின் நினைவு தினம்: சென்னை 11-ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு
08 Feb 2025சென்னை: வள்ளலாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
-
அதிபர் புதினை விமர்சித்த ரஷ்யப் பாடகர் மர்ம மரணம்
08 Feb 2025ஊரால்ஸ்:ரஷிய அதிபர் புதினை முட்டாள் என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
-
கோவை வேளாண்மை பல்கலை.யில் 7-வது மலர் கண்காட்சி தொடக்கம் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
08 Feb 2025கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர் கண்காட்சித் தொடங்கியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தனர்.
-
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கிய ரயில்வே
08 Feb 2025சென்னை: ரெயிலில் பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகையை ரெயில்வே துறை வழங்கியது.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி
08 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
-
மத்திய பட்ஜெட்டில் குறைவான நிதி ஒதுக்கீடு: தமிழகத்திற்கு நிதி கிடைக்காவிட்டாலும், நீதிக்காக போராடுவோம்: ஆவடி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
08 Feb 2025சென்னை, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு நிதி கிடைக்காவிட்டாலும்; நீதிக்க
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் சந்திப்பு
08 Feb 2025வாஷிங்டன், பிப். 09-: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு பலி
08 Feb 2025வேலூர்: ரெயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு இறந்ததாக தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கேரளா ரசிகருடன் நடிகர் விஜய் சந்திப்பு
08 Feb 2025சென்னை: கேரளாவில் இருந்து வந்த ரசிகரை நடிகர் விஜய் சந்தித்து பேசினர்.
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் நரேந்திர மோடி கருத்து
08 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர
-
இடைத்தேர்தல் நடைபெற்றஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி: டெபாசிட்டை இழந்தார் நா.த.க. வேட்பாளர்
08 Feb 2025ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்தியவர்: டெல்லி முதல்வராகிறார் பர்வேஷ்
08 Feb 2025புதுடில்லி: புதுடில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.