முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர் காங்கிரசார் நீக்கம் குறித்து மேலிட குழு நேரில் விசாரணை

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 22 - தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவால், இளைஞர் காங்கிரசார் நீக்கப்பட்டது குறித்து மேலிட குழுவினர் டெல்லியிலுருந்து வந்து நேற்று சென்னையில் விசாரணை மேற்கொண்டனர். ​தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தனது மனைவி ஜெயந்தியை மயிலாப்nullர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினார். அவர் மனு நிராகரிக்கப்பட்டதால் தங்கபாலு களத்தில் குதித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகி சிவகாமி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். தங்கபாலு போட்டியிடுவதற்கு கட்சியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.  மேலும் வேட்பாளர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறி தமிழ்நாடு முழுவதும் தங்கபாலுக்கு எதிராக காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அவரது வீடு முற்றுகை, தீக்குளிக்க முயற்சி, உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. காங்கிரசின் அதிகாரப்nullர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தங்கபாலுவின் நடவடிக்கைகளுக்கு சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். 

இதையடுத்து ஓட்டுப்பதிவு முடிந்து அன்று இரவோடு இரவாக எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன், தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ், கவுன்சிலர் சாந்தி, இளைஞர் காங்கிரஸ் தென்சென்னை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் பிரகாஷ் உள்பட 19 பேர் காங்கிரசில் இருந்து nullநீக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பை தங்கபாலு வெளியிட்டார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களை nullநீக்க தங்கபாலுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். விளக்கம் கேட்காமலேயே தங்களை கட்சியில் இருந்து nullநீக்கியது செல்லாது என்று ஆவேசமாக பதில் அளித்தனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவும் கண்டனம் தெரிவித்தார். இதனால் தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுத்தது. 

மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து தமிழக காங்கிரசில் நிலவி வரும் சூழ்நிலையை எடுத்து கூறினார்கள். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை nullநீக்கியது அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சஞ்சீவ்ஜோசப் தலைமையில் ஒரு குழு தமிழகத்துக்கு அனுப்பி நேரில் விசாரிக்கு மாறு ராகுல்காந்தி உத்தரவிட்டார். 

மேலிட குழுவினர் nullநீக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேருக்கும் இ.மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி இருந்தனர். அதில் நேற்று காலை 11.30 மணிக்கு சத்திய மூர்த்தி பவனில் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் அஜராக வேண்டும், விசாரணைக்கு வரும்போது கட்சி தொண்டர்களை கும்பலாக அழைத்து வராமல் தனியாக வரவேண்டும். இது ராகுலின் உத்தரவு என்று கூறியிருந்தனர். 

இதைத்தொடர்ந்து நேற்று காலை சஞ்சீவ்ஜோசப் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் சென்னை வந்தனர். அவர்கள் nullநீக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். null

நீக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜேம்ஸ் பிரகாஷ் (தென்சென்னை), சுரேஷ் (ஈரோடு), ஜவகர்பாபு (திருப்nullர்), நிர்வாகிகள் ஆர்.வி.ரஞ்சித்குமார், விஜயசேகர், ரஞ்சன்குமார், கமல், சக்திவேல் ஆகியோர் வந்து இருந்தனர். முன்னதாக டெல்லி மேலிட குழுவினர் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்க பாலுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு nullநீக்கப்பட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. அப்போது தேர்தலின்போது தங்கபாலு நடந்துகொண்ட விதம் பற்றி புகார் தெரிவித்தனர். இந்த விசாரணை முடிந்ததும் மேலிட குழுவினர் டெல்லியில் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். அதன்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி மேலிடம் முடிவு செய்யும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்