முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை விவகாரத்தில் ஐ.நா. கடமை தவறியுள்ளது

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

ஜெனிவா, மார்ச். 2 - இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது ஐ.நா. சபை, கடமை தவறி விட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் கழக தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் பேசிய நவநீதம் பிள்ளை கூறியதாவது, 

தஞ்சம் புகுந்த நாட்டில் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தட்டிக் கேட்க இயலாத அவல நிலையில் அகதிகள் வாடுகின்றனர். போர்கள் மற்றும் பொருளாதார தேக்கநிலையால் கடைநிலையில் உள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

சில நாடுகளில் போரால் இறப்பவர்களைக் காட்டிலும் வன்முறை மற்றும் குற்றச்செயல்களால் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் இதுதான் கவலை தரக்கூடிய செயல். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது, ஐ.நா. சபை அமைப்பு ரீதியில் தோல்வியடைந்து விட்டது. 

இந்தியாவைப் போல உலகின் பல நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கின்றன. டெல்லி மாணவி படுகொலையைத் தொடர்ந்து நீதிபதி வர்மா குழுவை இந்திய அரசு அமைத்தது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க அக்குழுவின் பரிந்துரைகளை இந்தியா செயல்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு நவநீதம்பிள்ளை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்