முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட்டிலிருந்தே விலகுகிறார் வாட்சன்?

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

ஆஸ்திரேலியா, மார்ச் - 13 - ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நாடு திரும்பிய ஷேன் வாட்சன், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சீரியசாக பரிசீலிக்கவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். இதனால் அவர் மனமுடைந்து சர்வதேச கிரிக்கெட்டையே உதற நேர்டிலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. பயிற்சியாளர் ஆர்தர் தோல்வி குறித்து வீரர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் ஆலோசனை என்ன, அடுத்த டெஸ்டிற்கு எப்படி தயார் செய்யவேண்டும், உத்தி என்ன போன்ற விவரங்களை கேட்டுள்ளார். ஆனால் துணைக் கேப்டனான வாட்சன், கவாஜா, மிட்செல் ஜான்சன், பேட்டின்சன் ஆகிஓர் இதனைச் செய்யவில்லை இதனால் அடுத்த டெஸ்ட் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வாட்சன் கூறியிருப்பதாவது:
ாஎனக்கு குழந்தை பிறக்கவிருப்பதால் ஆஸ்ட்ரேலியா செல்கிறேன், என் மனைவியின் அருகில் இருக்கவேண்டும் என்று நான் கூறுவதாயிருந்தேன், அதற்குள்ளாகவே அவர்கள் என்னை தேர்வு செய்யமாட்டேன் என்று கூறிவிட்டார்கள். உண்மையில் நான் உடைந்துதான் போய்விட்டேன். ஏதாவது சீரியசான தவறாயிருந்தால் நீக்கப்படுவது சரி, ஆனால் இது கொஞ்சம் அதிகம்தான். நேர்மையாகக் கூறவேண்டுமென்றால் இந்த நிலையில் எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து நான் சீரியசாக யோசிக்க வேண்டியுள்ளது. எனக்கு விளையாடுவதுதான் பிடிக்கும், கிரிக்கெட்டை நான் நேசிக்கிறேன், ஆனால் இப்போதைக்கு எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடப்போகிறேன். ஆனாலும் எனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து எந்த திசையில் செல்வது என்று முடிவெடுப்பேன் என்றார் வாட்சன். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் மிகவும் அருமையான பார்ம் தருணத்தில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது துரதிர்ஷ்டமே. பந்து வீசவும் செய்து ஆல்ரவுண்டராக இருந்தால் காயம் ஏற்படுகிறது அதனால் பேட்டிங் மட்டுமே செய்கிறேன் என்றார். இது கிளார்க்கிற்கு பிடிக்கவில்லை. பேட்டிங் என்றால் நிறைய பேர் உள்ளனர், ஆல்ரவுண்டர் என்ற இடம்தான் வாட்சனுக்கு சரியானது அப்போதுதான் அவர் அணியில் இருக்க முடியும் என்றார் கிளார்க்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்