முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினம் உற்சாகமான கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, ஏப். - 25 - ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினம் நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகத்துடனும், அன்பு மற்றும் சகோதரத்துவத்துடனும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மனித அவதாரம் எடுத்து கன்னி மரியாள் மூலமாக பூமியில் அவதரித்த ஏசு பிரான் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றுக்காக பாடுபட்டார். அவர் மனிதர்களின் பாடுகளை சுமந்து முள்முடி அணிந்து பாரமிக்க சிலுவையை சுமந்து சென்றார். பின்னர் அவர் அதே சிலுவையில் அறையப்பட்டு வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். பிறகு அவர் தான் வைக்கப்பட்டிருந்த கல்லறையில் இருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இந்த உயிர்த்தெழுந்த ஞாயிறை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் ஈஸ்டர்  தினமாக நேற்று கொண்டாடினர்.
நேற்று முன்தினம் இரவு தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் ஏசு பிரான் உயிர்த்தெழுதலை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகளும் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஏசுபிரான் உயிர்த்தெழுந்ததை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்தனர்.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
நாகப்பட்டணம் புனித வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் ஏசுபிரான் மண்ணுலகில் இருந்து விண்ணுலகிற்கு உயிர்த்தெழுந்த நிகழ்வை  தத்ரூப காட்சியாக செய்து காட்டினர். இதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
மதுரை புனித வளனார் ஆலயம், புனித மரியன்னை ஆலயம் உள்ளிட்ட பல கிறிஸ்துவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து, அன்பை பரிமாறிக்கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago