முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இங்கிலாந்து ராணி?

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச். 27 - இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. வரும் நவம்பர் மாதம் 15 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இங்கிலாந்து ராணி பங்கேற்க மாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டதாக லண்டனில் உள்ள காமன்வெல்த் அமைப்பின் செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கனடா பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணிக்க உள்ள நிலையில், பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்ரேலியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என  அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் இங்கிலாந்து ராணி பங்கேற்காவிட்டால் அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு முக்கியமான பின்னடைவாக அமையும். இந்த நிலையில் இந்த மாநாட்டையே மொரீசியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago