Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட் - இலங்கை கனடாவை வீழத்தியது

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, பிப். 22 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹம்பன்டோடா நகரில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்

தில் 210 ரன் வித்தியாசத்தில் கனடா அணியை தோற்கடித்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையில் உள்ள ஹம்பன் டோடா நகரில் உள்ள ராஜபக்சே அரங்கத்தில் 3 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் ஏ பிரிவில் உள்ள இலங்கை அணியும், கனடா அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இலங்கை அணி தரப்பில், உபுல் தரங்கா மற்றும் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

இலங்கை அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 332 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், இரண்டு வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே 81 பந்தில் 100 ரன்னை எடுத்தார். இது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர், டேவிசன் வீசிய பந்தில் பாலாஜி ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

கேப்டன் சங்கக்கரா 8 ரன் வித்தியாசத்தில் சதவாய்ப்பை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவர் 87 பந்தில் 92 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் டேவிசன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். தவிர, துவக்க வீரர் தில்ஷான் 59 பந்தில் 50 ரன்னையும், உபுல் தரங்கா 19 ரன்னையும், மேத்யூஸ் 21 ரன்னையும், சமரவீ ரா 18 ரன்னையும் எடுத்தனர். 

கனடா அணி சார்பில், டேவிசன் 56 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பைத்வான் 59 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ரிஜ்வான் சீமா 1 விக்கெட் எடுத்தார். 

கனடா அணி 333 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை இலங்கை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னில் சுருண்டது. 

இதனால் இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 210 ரன் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது உலகக் கோப்பையை பொறு த்தவரை அதிக ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். இந்த வெற்றி மூலம் இலங்கை அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

கனடா அணி தரப்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரிஜ்வான் சீமா அதிகபட்சமாக 35 பந்தில் 37 ரன்னை எடுத்தார். தவிர, கேப்டன் பகாய் 47 பந்தில் 22 ரன் னையும், பைத்வான் 16 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், குலசேகரா 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பெரீரா 24 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, முரளீதரன் 2 விக்கெட்டையும், மென்டிஸ் மற்றும் சமரவீரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜெயவர்த்தனே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago