முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் இரு இடங்களில் தாக்குதல்: 7 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

காந்தகர், ஏப். 8 - ஆப்கானிஸ்தானில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த டாக்டர் ஒருவர் உயிரிழந்தனர். தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாபூல் மாகாணத்தில் ஆளுனர் காருடன் சென்ற வாகனங்களை சர்வதேச கூட்டணி படையினரின் வாகனங்கள் தாண்டிச் சென்ற போது காரில் குண்டுகளை நிரப்பி கொண்டு வந்த தற்கொலைப்படையினர் வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் 3 அமெரிக்க படை வீரர்கள், 2 அமெரிக்கர்கள், ஒரு டாக்டர் உயிரிழந்தனர். 

மற்றொரு தாக்குதல் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தது. இதில் ஒரு அமெரிக்கர் உயிரிழந்தார் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. 2014 க்குள் கூட்டணிப் படை முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு பணியை ஏற்க உள்ள அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு அமெரிக்க படைகள் தரும் பயிற்சி போதுமானதா என்பதை மதிப்பிட அமெரிக்க முப்படை தளபதி மார்ட்டின் டெம்சி வந்த நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony