முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு. ஏப்ரல்.12 - தனி ஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்துக்கு இந்தியாதான் காரணம் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே குற்றம் சாட்டினார். இலங்கை ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்றபோது கடைசி 100 நாள்களில் போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப்சிங் பூரி கருத்து வெளியிட்டிருந்தார்.

 இதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே, இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர்க்கால அத்துமீறல்கள் பற்றி விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ் ஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை இப்போது குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக இலங்கை ஊடகத்துக்கு பேட்டியளித்த கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் தீவிரவாதத்தை உருவாக்கிய பொறுப்பிலிருந்து இந்தியா எப்போதும் விலகிவிட முடியாது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த1988-ம் ஆண்டில் இந்தியாவால் பயற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள் மாலத்தீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச்சம்பவத்துக்குப் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago