முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் ஜூன் 30ம் தேதி துவங்குகிறது

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.29 - மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூன் 30 ம் தேதி துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மே 16 ம் தேதிமுதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. 

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 17ம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் 8 ம் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் ஜூன் 30ம் தேதி துவங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16 ம் தேதி துவங்கி ஜூன் 2 ம் தேதிவரை விநியோயம் செய்யப்பட உள்ளது. மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தரப் பட்டியல் ஜூன் 21 ம் தேதி வெளியிடப்படும். 

அரசு கல்லூரிகளில் மொத்தம் 1653 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 635 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும். ஜூன் 30 ம் தேதி துவங்கும் கவுன்சிலிங்கின்போது விளையாட்டு வீரர்கள் மற்றம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் சிறப்பு பிரிவை சேர்ந்தவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஜூலை 1 ம் தேதி பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. 

விண்ணப்ப படிவக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 22 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. இந்த தகவல்களை மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக் குழு செயலாளர் ஷீலா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்