முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தியது

புதன்கிழமை, 8 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே.9 - ஐ.பி.எல். - 6 போட்டியில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 65 ரன் வித்தியாசத்தி ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது. மும்பை அணி தரப்பில், டெண்டுல்கர் மற்றும் டி.ஆர். ஸ்மித் இருவரும் அபா ரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக திணேஷ் கார்த்திக் மற்று ம் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, ஹர்பஜன் சிங், ஓஜா, ஜான்சன், மலிங்கா மற்றும் அகமது ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தது. 

ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டம் ஒன்று மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய மும்பை அணி கொல்கத்தாவி ன் பந்து வீச்சை சமாளித்து ஆடி சவா லான ஸ்கோரை எட்டியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்னை எடுத்தது. 

மும்பை அணியின் துவக்க வீரர்களாக இறங்கிய டெண்டுல்கர் மற்றும் டி.ஆர். ஸ்மித் இருவரும் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமை த்துக் கொடுத்தனர். இதுவே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரண மாக அமைந்தது. 

டெண்டுல்கர் அதிகபட்சமாக, 28 பந்தி ல் 48 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். ஸ்மித் 53 பந்தில் 47 ரன் னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அட க்கம். தவிர, திணேஷ் கார்த்திக் 18 பந் தில் 34 ரன்னையும், ரோகித் சர்மா 11 பந்தில் 16 ரன்னையும் எடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில் மெக்லார ன் 60 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, இக்பால் அப்துல்லா மற்றும் ஆர். பாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

கொல்கத்தா அணி 171 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை மும்பை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்னில் சுருண்டது. 

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் 65 ரன் வித்தியாச த்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

கொல்கத்தா அணி தரப்பில், காலிஸ் அதிகபட்சமாக 26 பந்தில் 24 ரன்னை எடுத்தார். தவிர, டி.பி. தாஸ் 23 ரன்னையும், பிஸ்லா 17 ரன்னையும், யூசுப் பதான் 13 ரன்னையும் எடுத்தனர். 

மும்பை அணி சார்பில், ஹர்பஜன்சிங் 27 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்எடு த்தார். தவிர, ஜான்சன் மற்றும் ஓஜா தலா 2 விக்கெட்டும், மலிங்கா மற்றும் அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்