மாட்ரிட், மே. 11 - ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் கால்பந்து வீரரும், தற்போது 86 வயதில் இருப்பவருமான ஆல்பிரடோ டி ஸ்டெபானோ, அட்டகாசமான ஒரு நிகழ்ச்சிக்குத் தயாராகி வருகிறார். அதாவது இந்த தாத்தாவுக்கு கல்யாணமாகப் போகிறது. அவரைக் கட்டிக்கப் போகிற பெண்ணுக்கு வயது 36 தான்.
86 வயதான ஆல்பிரடோ என்ற கால்பந்து ஜாம்பவானுக்கு இந்த வயதில் போய் காதல் தாக்கியுள்ளது. இவரைக் காதலிக்கும் பெண்ணணுக்கோ வயது 36தான். ரியல் மாட்ரிட் வீரர் ஆல்பிரடோ அந்தக் காலத்தில் ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் முக்கிய வீரராக இருந்தவர்.
மாரடனோ ஊர்க்காரர் மாரடோனா போன்ற கால்பந்து ஜாம்பவான்களைத் தந்த அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்தான் ஆல்பிரடோ. 2 முறை பலூன் வாங்கியவர் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பலூன் டி. ஓ.ஓர் வின்னர் விருதை 2 முறை வாங்கியுள்ளார் ஆல்பிரடோ. கோஸ்டாரிகா காதலி ஆல்பிரடோ கரம் பிடிக்கும் பெண்ணின் பெயர் ஜீனா கோன்சாலஸ். இவர் கோஸ்டாரிகாவைச் சேர்ந்தவர். இன்னும் ஒரு மாதத்திற்குள் திருமணம் நடக்கப் போகிறதாம்.
சூப்ப்ர் ஸ்டிரைக்கர் தாத்தா ஆல்பிரடோ அந்தக் காலத்தில் அதிரடியான ஸ்டிரைக்கராக திகழ்ந்தவர். அவரது காலத்தில் அவர் ஒரு முன்னணி ஸ்டிரைக்கராக இருந்துள்ளார். ஜீனாவுடனான காதல் குறித்து ஆல்பிரடோ கூறுகையில்,
நான் ஜீனாவைக் காதலிக்கிறேன். திருமணம் செய்யப் போகிறேன். 86 வயது எனது உடலுக்குத்தான். எனது இதயத்திற்கும், மனசுக்கும் இல்லை என்றார்சிரித்தபடி.