முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் நேற்று பந்த்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

கம்பம், ஏப். - 30 - கேரளாவில் நேற்று நடந்த பந்த்தை ஒட்டி தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.கேரள மாநிலத்தில் ஏலக்காய் ம்றும் தேயிலை தோட்டங்களில் மகசூலை அதிகரிக்க எண்டோசல்ப்பான் என்ற பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்த மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே அதை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் நடத்தப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25ம் தேதி கேரளா முதல்வர் அச்சுதானந்தன் உண்ணாவிரதமும் இருந்தார். பந்த்தை ஒட்டி கேரள மீநிலத்தில் அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் ஓடவில்லை. அரசு சார்ந்த நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை. ஓட்டல் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தது. மேலும் தமிழக, கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கேரள எல்லைக்குள் நுழையும் வழித்தடங்களுக்கான பஸ்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பந்த்தை ஒட்டி தேக்கடியில் படகுச்சவாரி வெறிச்சோடியது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாக காணப்பட்டது. முழு அடைப்பு காரணமாக கேரளாவில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் மாநில எல்லையான களியக்காவிளையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி கேரளா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago