கிரிக்கெட் சூதாட்டமாகிவிட்டது: சிவசேனை கருத்து

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, மே.18 - கிரிக்கெட் விளையாட்டு சூதாட்டமாகிவிட்டது என்று சிவசேனை கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி சிவசேனை கூறியதாவது:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு நல்லவர்கள் விளையாடும் விளையாட்டாகத் தெரியவில்லை. மாறாக இது ஒரு சூதாட்டமாக மாறியுள்ளது. மேலும் கிரிக்கெட் ஒரு தலைமுறையையே அழித்து வருகிறது.இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது அதில் விளையாடும் வீரர்களுக்கு புகழையும், பணத்தையும் தருகிறது. ஆனால் இது மற்றொரு பக்கத்தில் சூதாட்டம், செக்ஸ் மோசடியைத் திறந்து விடுகிறது. கிரிக்கெட்டில் உள்ள கவுரவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அழிக்கின்றனர்.

கிரிக்கெட் பண்பாளர்கள், நல்லவர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல.  இதற்கும் நாட்டுப்பற்றுக்கும் சம்பந்தமில்லை என்றும் சிவேசனை கருத்து தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: