முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே சிறந்த பொதுப்போக்குவரத்து: சென்னை போக்குவரத்து கழகம், மெட்ரோ நிறுவனத்திற்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
CM-1-2025-11-17

சென்னை, நாட்டிலேயே சிறந்த பொதுப்போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேற்று (17.11.2025) தலைமைச் செயலகத்தில், ஹரியானாவில் நடைபெற்ற 2025-ம் ஆண்டிற்கான 18-வது அர்பன் மொபிலிட்டி இந்தியா மாநாட்டில் தேசிய அளவில் கலந்து கொண்ட 17 பெருநகரங்களில் நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான விருது, சிறந்த பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயில் என்ற பிரிவின் கீழ், நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்து விளங்குவதற்கான விருது மற்றும் சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ இரயில் என்ற பிரிவின் கீழ் நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழ் ஆகிய விருதுகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்  சி. சிவசங்கர், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை-மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் த. பிரபுசங்கர் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் சிறப்பம்சங்கள்:

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில், தினசரி 12.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் பயணிகள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா “விடியல் பயணம்” திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயண சலுகை வழங்கப்படுவதுடன், இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கு பிரத்தியேகமான சிறப்பு பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது.

மேலும், அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் அறிமுகம் செய்து, தேசிய பொது போக்குவரத்து அட்டை யு.பிஐ., கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் டிஜிட்டல் கட்டண வசதியும் வழங்கப்படுகிறது. அத்துடன் “சென்னை ஒன்” செயலி மூலம், பன்முக போக்குவரத்து பயணத் திட்டமிடல் மற்றும் மாநகர் பேருந்து , மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகியவற்றிற்கு ஒரே பயணச்சீட்டு பயண வசதியும், மின்சார பேருந்துகள் சேவைகள் மூலம் வாயுக்களில் உமிழும் மாசுக்களை குறைத்து, பசுமை போக்குவரத்திற்கும் வித்திடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து