ஹைதராபாத், மே.21 - 6வது ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்து விட்டது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இதையடுத்து பிளே ஆப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸும் ஒரு போட்டியில் மோதுகின்றன. இன்னொரு போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. முன்னதாக பிளே ஆப் பிரிவுக்குத் தகுதி பெறும் நான்கு அணிகளில் 3 அணிகள் மட்டுமே உறுதியாகியிருந்தன. அவை சென்னை, மும்பை மற்றும் ராஜஸ்தான். 4வது அணிக்கான போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகியவை கடுமையான மோதலில் இருந்தன. நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் வென்றால் பிளே ஆப்புக்குள் நுழையலாம் என்ற நிலை. ஒருவேளை தோற்றால் நெட்ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் உள்ளே புகுந்து விடக் கூடிய சூழ்நிலை. இதனால் நேற்று இரு அணிகளின் ரசிகர்களும் பதைபதைப்புடன் இருந்தனர். இருப்பினும் ஹைதராபாத் அணி நேற்று சிறப்பாக ஆடி கொல்க்ததாவை வென்று தனது ரசிகர்களை உற்சாகக் கடலில் மூழ்கடித்தது. பெங்களூர் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு வரை அது டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இருந்தது. உருவாக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே அது தனது சிறப்பான ஆட்டத்தால் பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- உவரி சுயம்புலிங்க சுவாமி ரதம்.
- மதுரை வண்டியூரில் மீனாட்சி சுந்தரரேசுவரர் எழுந்தருளி தெப்போற்சவம்.
- குன்றக்குடி, சென்னை கபாலீசுவரர், காஞ்சிப் பெருந்தேவி இத்தலங்களில் தெப்போற்சவம்.
- மேல்மருவத்தூர் தீப தரிசனம்.
- வடலூர் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
- பழனி, திருச்சேறை சாரநாதர், கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி, மருதமலை முருகப்பெருமான் இத்தலங்களில் ரதம்.
- மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக்கூடு.