முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 கிட்னிகளுடன் உயிர் வாழும் இங்கிலாந்து பெண்

திங்கட்கிழமை, 20 மே 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், மே.21 - வயிற்றில் வலி என சோதனை செய்த இளம்பெண் ஒருவருக்கு 4 கிட்னி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சராசரி மனிதருக்கு 2 'கிட்னிகள் (சிறுநீரகம்) உண்டு. அதில் ஒன்று பழுதடைந்தாலும் கூட மற்றொன்றின் உதவியுடன் உயிர் வாழ முடியும். சில காரணங்களால் இரண்டுமே செயல்பட முடியாவிட்டால், மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படலாம். ஆனால், ஜெசிகா கதையோ வேறு. லண்டன் பகுதியில் வசித்து வருபவர் ஜெசிகா கர்பி(20). இவரது அடிவயற்றின் வலதுபுறத்தில் ஏற்பட்ட வலியால் அவதி பட்டு வந்தார். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை நடத்தியதில் மருத்துவர்கள் அவருடைய வலதுபுற சிறுநீரகத்தில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். 11 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு சோதனை செய்ததில் வலது புறத்தில் 2 கிட்னி இருப்பதும், அதிலும் கட்டி வளர்ந்திருப்பதும் தெரியவந்தது. எனவே அந்த கட்டிகளை அகற்ற ஆபரேஷன் செய்தனர். ஆபரேஷனின் போது, அந்த பெண்ணின் உடலில் மேலும் 2 கிட்னிகள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். 4 கிட்னிகள் ஒருவருக்கு அமைந்திருந்தது மிகவும் அபூர்வ செயல் என டாக்டர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்