கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை!

வியாழக்கிழமை, 23 மே 2013      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி, மே. 24 - மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங், ஸ்ரீசாந்த் கேஸ் என்று நாடே அதிர்ந்து போய்க் கிடந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே இன்னும் ஆர்வம் குறையவில்லையாம். ஐ.பி.எல் போட்டிகளுக்கு ஆதரவு சற்றும் குறையாமல் அமோகமாக இருக்கிறதாம். ஐ.பி.எல். போட்டிகளில் நடந்த ஸ்பாட் பிக்ஸிங்தான் நாட்டின் இப்போதைய தலைப்புச் செய்தி. ஆனால் ரசிகர்களுக்கு அது இரண்டாம் பட்சமாகவே இருக்கிறதாம். இன்னிக்கு யார் விளையாடுகிறார்கள், ஸ்கோர் என்ன, யாருக்கு பட்டம் கிடைக்கும், சென்னைக்கு சாம்பியன் பட்டம் கிடைக்குமா என்ற ரேஞ்சில்தான் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: