முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்

சனிக்கிழமை, 25 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, மே. 26 - ஐ.பி.எல். -6 டி - 20 கிரிக்கெட் போட்டி யில் கொல்கத்தாவில் இன்று நடைபெ றும் இறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. 6 -வது ஐ.பி.எல். போட்டி கடந்த இர ண்டு மாத காலமாக வெகு விமர்சை யாக நடந்து வருகிறது. இதை கிரிக்கெ ட் ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர். 

இந்தப் போட்டியில் 8 அணிகள் களம் இறங்கின. முதலில் மொத்தம் 72 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் ஒவ் வொரு அணியும் மற்றொரு அணியுட ன் 16 முறை மோதியது. 

லீக் ஆட்டத்தின் முடிவில் சென்னைசூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைச ர்ஸ் ஐதராபாத் ஆகிய 4 அணிகள் கூடு தல் புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்று க்கு முன்னேறின. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர் ஸ், புனே வாரியர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 4 அணிகள் குறைந்த புள்ளிகள் பெற்று கடைசி 4 இடத் தைப் பிடித்தன. 

இதன் பிளே ஆப் சுற்று கடந்த 21-ம் தே தி துவங்கியது. முதல் போட்டியில் செ ன்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 

முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற செ ன்னை சூப்பர் கிங்ஸ் இறுதிச் சுற்றுக்கு ள் நுழைந்தது. இதில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் பின்பு நடந்த குவாலிபயர் சுற்றில் ஆடியது. 

22-ம் தேதி நடந்த குவாலிபயர் -1 ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரை சர்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த ஐதராபாத் அணி வெளியே றியது. 

இதனைத் தொடர்ந்து 24 -ம் தேதி நடந் த குவாலிபயர் - 2 ல் ராஜஸ்தான் ராய ல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகி ய அணிகள் மோதின. 

இதில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. தோல் வி அடைந்த ராஜஸ்தான் அணி போட்டியில் இருந்து வெளியேறியது. 

ஐ.பி.எல். - 6 போட்டியின் இறுதிச் சுற் று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு துவங் குகிறது. இதில் கோப்பையைக் கைப் பற்ற சென்னை மற்றும் மும்பை அணிகள் களம் இறங்குகின்றன. 

சென்னை அணியில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். மைக் ஹஸ் சே, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, டிவைன் பிராவோ, ஜடேஜா ஆகி யோர் நல்ல பார்மில் உள்ளனர். 

அதே போல மும்பை அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். டெண்டுல்கர்,ரோகித் சர்மா, ராயுடு,போன்ற சிறந்த வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். 

எனவே இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்அணிகளு க்கு இடையே நடக்க இருக்கும் இறுதிச் சுற்று ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். வீரர்களின் அதிரடிகளும் , வான வேடிக்கைகளும் காத்திருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்