எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.30 - பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. பெப்சி அமைப்பில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். இதனால் பெப்சி உடையும் நிலையிலுள்ளது.
பெப்சி எனும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் சுமார் 23 சங்கங்கள் உள்ளன. இதன் தலைவராக டைரக்டர் அமீர் உள்ளார். இந்த அமைப்பிலுள்ள ஒவ்வொரு சங்கத்திலும் உட்கட்சி பூசல் நிறையவே உள்ளது. அது அவ்வப்போது வெடிக்கிறது.
பெப்சியில் அங்கம் வகிக்கும் கார் டிரைவர்கள் யூனியன் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருவதால், அந்த யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று பெப்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக சென்றபோது பெப்சியின் பொருளாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் நிர்வாகி தனபால் ஆகிய இருவரும் தாக்கப்பட்டார்கள். இருவருக்கும் அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அத்துடன் பெப்சியின் பொதுக்குழுவை கூட்டி, டிரைவர் யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பெப்சி நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் செந்தில் மற்றும் அவரது ஆதாரவாளர்களை கைது செய்யக்கோரி பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதனால் தமிழ்நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
லைட்மேன்கள், கேமரா உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலைக்கு வராததால், விஷால் நடிக்கும் பாண்டிய நாடு, கார்த்தி நடிக்கும் பிரியாணி உள்பட 40 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகல்:
இதற்கிடையில் பெப்சி அமைப்பில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதனால் பெப்சி சங்கம் உடையும் சூழல் உருவாகியுள்ளது. டிரைவர்ஸ் யூனியன் பஞ்சாயத்து தொடர்பான பேச்சுவார்த்தை கைகலப்பில் முடிந்தது. இதனால் பெப்சி அமைப்பு நேற்று முன்தினம்ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டது. இதனால் சின்னத் திரைதொடர்களுக்கான படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பெப்சியில் அங்கம் வகிக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சியில் இருந்து விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தொடர்களை தயாரித்து வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாக தொழிலாளர்கள் அவர்களுக்குள் ஏற்படும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பை எந்தவித முன்னறிவுப்புமின்றி நிறுத்திவிடுகிறார்கள். இதனால் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு குறித்த நேரத்தில் ஒளிப்பரப்பு செய்ய தங்களது தொடர்களை தரமுடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்கு மேலும் எங்களது தயாரிப்பாளர்கள் சோதனைகளை தாங்க முடியாத காரணத்தினால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சின்னத்திரைகளுக்கு என்று தனிப்பட்ட தொழிலாளர்கள் அமைப்பு உள்ளது போல் தமிழ்நாட்டிலும் தொடங்குவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெப்சி தொழிலாளர்கள் சரியாக வேலைக்கு வராததால் தயாரிப்பாளர்கள் நிறைய பேருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பலமுறை அழைத்தும் யாரும் பேச முன்வரவில்லை. இதனால் பெப்சியில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது செயலாளர் டி.வி.சங்கர், பொருளாளர் டி.ஆர்பாலேஷ் மற்றும் சத்தியஜோதி தியாகராஜன், அழகன், தமிழ்மணி, மதி ஒளிகுமார், சோலைராஜா, ராமதாஸ் என பலர் கலந்து கொண்டனர்.
டிரைவர்ஸ் யூனியன் பிரச்னை, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகல் உள்ளிட்ட பிரச்னைகளால் பெப்சி அமைப்பு உடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Dec 2025- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலி நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
16 Dec 2025



