முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை மனோரமா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

சனிக்கிழமை, 1 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன். 2 - நடிகை மனோரமாவுக்கு நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மனோரமாவுக்கு 68 வயது ஆகிறது. ஏற்கனவே அவருக்கு மூட்டுவலி இருந்தது. இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். பின்னர் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் அடிபட்டது. 

தேனாம் பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சையும் நடந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். 

உடல்நிலை பூரணமானதை தொடர்ந்து மீண்டும் படங்களில் நடித்தார். ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். 

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். நேற்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago