முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் காகிதப் பை செய்ய சஞ்சய் தத்துக்கு பயிற்சி

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

புனே,ஜூன்.3 - புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு காதிதப் பைகளை செய்ய பயிற்சி தரப்படுகிறது. அவரது உழைப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஊதியம் தரப்படும். கடந்த 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பின் போது ஆயுதங்கள்வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து புனேயில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உயர்தரமான கனமான 6 முதல் 8 கிலோ எடை கொண்ட  காகித பைகள் தயாரிப்பது தொடர்பாக சஞ்சய் தத்துக்கு பயிற்சி அளிக்கப்படும். தற்போது இவைதான் கடைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன. அவரது பணி செய்ல்பாட்டை பொறுத்து அதிக பட்சமாக ரூ.40 வரை ஊதியம் தரப்படும் என சிறைத்துறை வட்டாரங்க்ள் தெரிவித்துள்ளன. 

சஞ்சய் தத் கடினமான பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறை நிர்வாகம் அதை அனுமதிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்