முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவப் படிப்பு தர வரிசை: அமைச்சர் வெளியிட்டார்

புதன்கிழமை, 12 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.13 - எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர சுமார் 29 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அமைச்சர் வீரமணி ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.

அதில் முதல் 10 இடங் களைப் பிடித்த மாணவ- மாணவிகள் பெயர் விவரங்களை அவர் அறிவித்தார். அவர் கூறியதாவது:-

மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 29 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 616 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 28 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் 10 ஆயிரத்து 182 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 603 பேர் மாணவிகள். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் எடுத்து 7 பேர் முதலிடத்தில் உள்ளனர்.

அவர்கள் விவரம் வருமாறு:-

1. எஸ்.அபினேஷ் - திண்டுக்கல்

2. பரணீதரன் - திருக்கோவிலூர்

3. பழனிராஜ் - திருசெங்கோடு

4. எஸ்.தினேஷ் - தர்மபுரி

5. கே.ரவீனா-ஊத்தங்கரை

6. நந்தினி - திருப்பத்தூர்

7. ஜெயஓவியா -காட்பாடி

199.75 கட்-ஆப்பை 3 பேர் பெற்றுள்ளனர்.

1. முத்து மணிகண்டன் - ஆவடி

2. விக்னேஷ் - திருப்புர்ை

3. ஹேம்நாத்-கிருஷ்ணகிரி

கவுன்சிலிங் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் 19-ந்தேதி தொடங்கி நடைபெறும். முன்னதாக 18-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு, மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.

இந்த ஆண்டு 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1823 எம்.பி.பி.எஸ். இடங்கள் முதல் கட்டமாக நிரப்பப்படும். பிறகு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி கடிதம் வந்ததும் கூடுதலாக 285 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சாதாரா, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ரேங்க் பட்டியல் விவரங்களை மாணவர்கள் றறற.வாெநயடவா.ழசப எனும் இணையதளத்தில் காணலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்