முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஜிஸ்திரேட்டு கைது: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 - மாஜிஸ்ட்ரேட் கைது விவகாரம் தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் வக்கீல்கள் முறையிட்டுள்ளனர். குன்னுனூரை சேர்ந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேசுவரி தன்னை மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் காதலித்து ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் செய்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மாஜிஸ்திரேட்டு தங்கராஜ் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் வக்கீல்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவர் பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஸ்குமார் அகர்வால் முன்பு நேற்று  ஆஜராகி சில கருத்துக்களை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

போலீஸ் டி.ஜி.பி. மீது வக்கீல்கள் புகார் கொடுத்த பிறகு வக்கீல்கள் கைது செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இதுவரை 6 வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாஜிஸ் திரேட்டை கைது செய்து விலங்கிட்டு அழைத்து சென்றுள்ளனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது சுப்ரீம் கோர்ட்டு வகுத்து கொடுத்துள்ள நடைமுறைக்கு எதிரானது.

குஜராத் அரசுக்கு எதிராக வக்கீல்கள் தொடர்ந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு உள்பட சிலரை கைது செய்வதில் சில நடைமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக வகுத்து கொடுத்துள்ளது. அதை போலீசார் மீறி உள்ளனர். இது நீதித்துறை மீது நடத்தும் தாக்குதல். ஏற்கனவே இதுபற்றி முறையிட்டுள்ளேன். வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க ரகசிய கூட்டம் போட்டு போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

இந்த விஷயத்தை கிடப்பில் போடாமல் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும் என்று முறையிட்டார். வக்கீல் பிரபாகரனின் கருத்துக்களை கேட்ட பிறகு நீதிபதிகள் ராஜேஸ்குமார் அகர்வால், சத்திய நாராயணா ஆகியோர் கூறும் போது, இது சம்பந்தமாக ஆராய்வோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்