முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசனோடு வாழ மாட்டேன்: தர்மபுரி திவ்யா அறிவிப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.4 - தர்மபுரி கலப்பு திருமணத்தில் சம்மந்தப்பட்ட பெண் திவ்யா, இனிமேல் இளவரசனோடு வாழ்வதற்கு தனக்கு விரும்பமில்லை என்று திடீர் என்று அறிவித்துள்ளார். தர்மபுரியை சேர்ந்த திவ்யா மற்றும் இளவரசன் ஆகியோர் கடந்த நவம்பர் 10-ம் தேதி காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டதை அடுத்து திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அதை தொடர்ந்து தர்மபுரி அருகில் உள்ள அண்ணாநகர் காலனி நத்தம் காலனி, பொண்ணம்பட்டி காலனி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் கலவரத்தில் தீக்கிரையாகின. 

இதைத்தொடர்ந்து திவ்யா கணவனின் வீட்டில் இருந்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தன்னுடைய மகளை கணவன் வீட்டில் சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். அவள் நிம்மதியாக அங்கு இல்லை. கணவன் இளவரசனிடமிருந்து மகளை மீட்டு தரும்படி தெரிவித்திருத்தார். 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திவ்யா தாயிடத்தில் ஆஜராகி நீதிபதியை பார்த்து தற்போது உள்ள சூழ்நிலையில் தெளிவான முடிவு எடுக்க சிறிது காலம் தாயாருடன் இருப்பது தெரிவித்ததை அடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது திவ்யா தாயாருடன் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து திவ்யாவின் தாயார் தேன்மொழி தொடர்ந்து ஆட்கொணர்வு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தாக அவர் சார்பு வக்கீல் தெரிவித்தார். ஆனால் இளவரசன் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திவ்யா மற்றும் அவர் தாயார் தேன்மொழியை பா.ம.க. மற்றும் வன்னிய இன தலைவர்கள் மிரட்டியதாக பெருத்த குழப்பமான நிலையில் உள்ளதால் திவ்யாவுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று தெரிவித்தை அடுத்து நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 

இளவரசன் தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை வரும் 5-ம் தேதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்