முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தகயா வெடிப்பு: சென்னை - 8 நகரங்களில் உஷார் நடவடிக்கை

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 -  புத்தகயாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பீகார் மாநிலம், புத்தகயாவில் அமைந்துள்ள மகாபோதி கோவில் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் அதிகாலை அடுத்தடுத்து 9 குண்டுவெடிப்புகளை நடத்தினர். இதில் 2 புத்த மதத்துறவிகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ள புத்தகயாவுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ (என்.எஸ்.ஜி.) படைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

நாட்டில் அமைதியை குலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குற்றவாளிகளை பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உள்துறை இணை அமைச்சர் ராஜாங்க மந்திரி ஆர்.பி.என்.சிங் கூறினார்.

இந்த நிலையில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள சென்னை, பெங்களுார், மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா, ஆமதாபாத், டெல்லி ஆகிய 8 நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி இந்த நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 நகரங்களிலும் புத்த கோவில்கள், வழிபாட்டுத்தலங்கள், திபெத் செட்டில்மெண்டு பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

மேலும், எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்