முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்எல்சி பங்கு விற்பனை: தமிழக அரசுக்கு கோரிக்கை

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - நெய்வேலி அனல் மின் நிலையத்தின் (என்எல்சி) 5 சதவீதப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பது குறித்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடன் (செபி) பேச்சுவார்த்தை நடத்த மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பங்கு விலக்கல் துறை (டிபார்ட்மெண்ட ஆடிப் டிஸ்இன்வெஸ்ட்மென்ட்) கேட்டுக் கொண்டுள்ளது..

இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

நிறுவனங்கள் பங்கேற்புத் திட்டத்தின் (ஐபிபி) கீழ், என்எல்சியின் ஐந்து சதவீதப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்த யோசனை குறித்து, செபியுடன் ஆலோசிக்கப்பட்டது. என்எல்சியின் 5 சதவீதப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க இயலும் என்று செபி கருத்துத் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிலக்கரித் துறை, பங்கு விலக்கல் துறைஇ தமிழக அரசு ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இறுதி முடிவு எட்டப்படும்.

எனவே, செபியுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.

பங்குகள் விற்பனையாளரின் வழிக்காட்டுதலின் அடிப்படையில், அதற்கான ஒப்பந்தம் அமையும். அதை அடிப்படையாக வைத்து, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பனை செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

என்எல்சியின் ஐந்து சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை அண்மையில் முடிவு செய்தது. அதற்கு தமிழக அரசும், தமிழக கட்சிகளும் என்.எல்.சி தொழிற்சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் முடிவை எதிர்த்து, என்எல்சி தொழிலாளர்கள் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, என்எல்சி பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும் அல்லது அவற்றை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று முறை கடிதம் எழுதினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்