முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாலி உடலுக்கு ரஜினி உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை 20 - வாலி உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி(82) உடல் நலக் குறைவால் நேற்று முன்தினம்  மாலை காலமானார். அவரது இயற் பெயர் ரங்கராஜன் ஆகும். தமிழில் 15 ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, புதிய வானம் புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன், வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், அவளா சொன்னாள் இருக்காது என எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்து இக்கால நடிகர்கள் படங்கள் வரை 15 ஆயிரத்துக்கு மேல் பாடல்கள் அவர் எழுதி உள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எழுதிய உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

வாலிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.  நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த ஜூன் 14-ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வார காலத்துக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் உடல்நிலை சீரானது ஆனால் கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது. அவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். நேற்றும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளது.உறவினர்கள் உடன் இருந்து கவனித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி நேற்று முன்தினம் மாலை 5.10க்கு காலமானார். அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும், நேற்றும் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினார். நேற்று காலையிலிருந்தே, திரைஉலகினரும், அரசியல் தலைவர்களுக்கு அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்த வந்தனர். அவரது உடலுக்கு  தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி, வைகோ, விஜயகாந்த், தி.க.தலைவர் கி.வீரமணி, நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், சரத்குமார், அஜித்குமார், ஷாலினி, இயக்குனர் பி.வாசு, இளையாரஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி உள்பட ஏராளமானவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின் நேற்று மாலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உடன் வர அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்