முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேத்-க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் குழுவில் இந்திய டாக்டர்

புதன்கிழமை, 24 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 25 - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத் மிடில்டனுக்கு பிரசவம் பார்த்த லண்டன் டாக்டர்கள் குழுவில் இந்திய டாக்டர் ஒருவரும் இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து அரசப் பரம்பரையின் அடுத்த வாரிசான, இளவரர் வில்லியம்-கேட் தம்பதியினரின் முதல் குழந்தை பிறந்தது. அந்த அழகான ஆண் குழந்தையை பெற்றெடுக்க இளவரசி 10 மணி நேரம் பிரசவ வலியுடன் போராடினார். இறுதியில் மருத்துவர்கள் உதவியுடன் அக்குழந்தை பிறந்தது. அந்த அரசக் குடும்பத்து குழந்தையைப் பற்றி புதிய புதிய சுவாரஸ்யத் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது. 

தற்போது, கேட் மிடில்டனுக்கு பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவில் மும்பையைச் சேர்ந்த இந்திய மருத்துவரான சுனித் கொடாம்மே இடம் பெற்றிருந்தார் என தெரிய வந்துள்ளது. இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். மும்பையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது லண்டன் செயிண்ட் மேரீஸ் மருத்துவமனையில் இளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்