காஷ்மீரில் பள்ளத்தில் டாக்சி விழுந்து 11 பேர் பலி

kashmir-map 1

 

ஜம்மு, மே 7 - காஷ்மீர் மாநிலத்தில் டாக்சி ஒன்று கிடுகிடு பள்ளத்தில் விழுந்து 11 பேர் பலியானார்கள். 3 குழந்தைகள் படுகாயத்துடன் உயர் தப்பினர். காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் சஹாதரா என்ற இடத்தில் இருந்து ஒரு வாடகைக் கார் கூல் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த டாக்சி கிடு கிடு பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் டாக்சியில் பயணம் செய்த 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.

ஆனால் 3 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின. இந்த குழந்தைகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளன. இந்த குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ