டோர்ஜி காண்டூ உடலுக்கு பிரதமர்-சோனியா அஞ்சலி

Dorji khandu

 

இதாநகர்,மே.7 - ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முதல்வர் டோர்ஜி காண்டூ உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர். 

அருணாசலப்பிரதசே முதல்வர் டோர்ஜி காண்டூ கடந்த 30-ம் தேதி அன்று தவாங் நகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இதாநகருக்கு வந்தனர். ஹெலிகாப்டர் நடுவானில் வந்துகொண்டியிருந்தபோது மலைமீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதல்வர் டோர்ஜி மற்றும் அவருடன் வந்த 4 பேர் கருகி செத்தனர். மலைப்பகுதியில் அவரது உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு தலைநகர் இதாநகருக்கு நேற்றுமுன்தினம் கொண்டுவப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. டோர்ஜி உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பர் ஆகியோர் நேற்று இதாநகருக்கு சென்று டோர்ஜி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் அங்கு இருந்தனர். முன்னதாக டெல்லியில் இருந்து 3 பேரும் தனி விமானத்தில் அசாம் மாநிலத்தில் உள்ள லிலாபாரி விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இதாநகரில் டோர்ஜி உடல் வைத்திருந்த இல்லத்திற்கு சென்றனர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ