முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - டெல்லி அணி அபார வெற்றி

சனிக்கிழமை, 7 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத்,மே. 7 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாச த்தில் டெக்கான் சார்ஜர்சை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னிலை பெ ற்று இருக்கிறது. 

இந்தப் போட்டியில் டெல்லி அணி தரப்பில், கேப்டன் சேவாக் சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஹோப் ஸ் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடி னர். 

முன்னதாக பெளலிங்கின் போது, அகார்கர் நன்கு பந்து வீசி 2 முக்கி ய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சால்வி மற்றும் ஹோப்ஸ் ஆகி யோர் அவருக்குப் பக்கபலமாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர் வதேச அரங்கத்தில் 46 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் சங்கக்கரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கேப்டன் சேவாக் தலைமையிலான் டெல்லி அணியும் மோதின. 

இதில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. டெக்கான் அணி தரப்பில், எஸ். தவான் மற்றும் ரவி டேஜா இரு வரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு  வீரர் அரை சதமும், மூன்று வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.

டெக்கான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டுமினி அதிகபட்சமாக, 31 பந்தில் 55 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும் பினார். 

அடுத்தபடியாக கேப்டன் சங்கக்கரா, 36 பந்தில் 44 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். தவிர, துவக்க வீரர் எஸ். தவான் 18 பந் தில் 29 ரன்னையும், கிறிஸ்டியன் 22 பந்தில் 27 ரன்னையும் எடுத்தனர். 

டெல்லி அணி சார்பில், அகார்கர் 29 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஹோப்ஸ் மற்றும் சால்வி ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர். 

டெல்லி அணி 176 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை டெக்கான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19 ஓவரில் (6 பந்து மீதமிருக்கையில்)6 விக்கெட்டை இழந்து 179 ரன்னை எடுத்தது. 

இதனால் டெல்லி அணி ஐதராபாத்தில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 வெற்றிப் புள்ளிகள் கிடைத்தது. 

டெல்லி அணி தரப்பில் கேப்டன் சேவாக் அதிரடியாக ஆடி சதம் அடி த்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவர் 56 பந்தில் 119 ரன்னை எடு த்தார். இதில் 13 பவுண்டரியும், 6 சிக்சரும் அடக்கம். தவிர, ஹோப்ஸ், இர்பான் பதான் மற்றும் கீப்பர் ஓஜாஆகியோர் அவருக்குப் பக்கபல மாக ஆடினர். 

டெக்கான் அணி சார்பில், ஸ்டெயின் மற்றும் இஷாந்த் சர்மா இருவரு ம் தலா 2 விக்கெட் எடுத்தனர். தவிர, ஏ. மிஸ்ரா மற்றும் கிறிஸ்டியன் இருவரும் மேற்படி இருவருக்கும் ஆதரவாக பந்து வீசினர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சேவாக் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்