முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராண்டி உண்ணாவிரதம் 7-வது நாளாக நீடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

ராஞ்சி, மே- 8 - ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண கோரி ஜே.வி.எம்.பி . கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி மேற்கொண்டு வரும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நேற்று 7 வது நாளை எட்டியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியில் அம்மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  மாற்று இடம் கொடுப்பதாக அரசு கூறினாலும் கூட, பலருக்கு இன்னும் மாற்று இடம் கிடைக்கவில்லை.
இது தொடர்பான போலீஸ் துப்பாக்சிச்சூடு மற்றும் கலவரத்தில் இது வரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர காணக்கோரி ஜே.வி.எம்.பி. கட்சியின் தலைவர் பாபுலால் மராண்டி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற மாநில அரசின் அழைப்பையும்  மராண்டி நிராகரித்து விட்டார்.
முன்னாள் முதல்வரான மராண்டி தனது உண்ணாவிரதத்தை நேற்று 7- வது நாளாக நீடித்தார்.
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  பாதுகாப்பு கொடுக்க ஒரு சட்டத்தை கொண்டு வரவும் அது தொடர்பான விவாதத்தை மேற்கொள்ளவும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று  பாபுலால் மராண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்