முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றி சாதனை

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக.27  - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஆஷஸ் தொடர் 5-வது கிரிக்கெட் டெ ஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படை த்துள்ளது. இந்த 5-வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆஸி. அணி தப்பி யது, போட்டி டிராவானது. 

இங்கிலாந்து அணியின் 2-வது இன்னி ங்சில் டிராட் மற்றும் பீட்டர்சன் இருவ ரும் அரை சதம் அடித்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பகக்கபலமாக, கேப்டன் கூக், பெல் மற்றும் வோக்ஸ் ஆகியோர் ஆடினர். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெ னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந் தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன் னிங்சில் 128.5 ஓவரில் 9 விக்கெட் இழ ப்பிற்கு 492 ரன்னை எடுத்து ஆட்ட த் தை டெக்ளெர் செய்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில், வாட்சன் 176 ரன்னையும் ஸ்மித் 138 ரன்னையும் எடுத்தனர். தவிர, ஹாடின் 30 ரன்னையும், சிட்லே மற்றும் பால்க்னர் தலா 23 ரன்னையும், ஹாரிஸ் 33 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில், 377 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில், ஜோ ரூட் 68 ரன் னையும், பீட்டர்சன் 50 ரன்னையும், டிராட் 40 ரன்னையும், பெல் 45 ரன்னையும், பிரையர் 47 ரன்னையும், வோக்ஸ் 25 ரன்னையும், ஸ்வான் 34 ரன்னையும் எடுத்தனர். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 23 ஓவரில் 6 விக்  கெட் இழப்பிற்கு 111 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது. 

ஆஸி. அணி தரப்பில், கேப்டன் கிளா ர்க் 28 ரன்னை எடுத்து ஆட்டம் இழக் காமல் இருந்தார். தவிர, வாட்சன் 26 ரன்னையும், பால்க்னர் 22 ரன்னையும், வார்னர் 12 ரன்னையும், ஸ்டார்க் 13 ரன் னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 227 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கை ஆஸி. அணி வை த்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 40 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற் கு 206 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 5-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து அணி இறுதியில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

இங்கிலாந்து அணி தரப்பில், பீட்டர்சன் 55 பந்தில் 62 ரன்னையும், டிராட் 87 பந் தில் 55 ரன்னையும் எடுத்தனர். தவிர, கேப்டன் கூக் 34 ரன்னையும், பெல் மற் றும் வோக்ஸ் தலா 17 ரன்னையும் எடு த்தனர். இந்தப் போட்டியின் நாயகனா க வாட்சனும், தொடர் நாயகனாக பெ ல்லும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்