முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெடரர் - செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 31 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் முன்னணி வீரரான ரோஜர் பெட ரர் மற்றும் செரீனா வில்லியம்ஸ் இரு வரும் 2-வது சுற்றில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.  இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் உலக முன்னாள் நம்பர் - 1 வீரரான ரோஜர் பெடரரும், அர்ஜென்டினா வீர ரும் மோதினர்.   

இந்தப் போட்டியில் அனுபவமிக்க வீர ரான பெடரர் எளிதான வெற்றியைப் பெற்றார். அவர் இறுதியில் 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் கார்லோஸ் பெ ர்லாக்கை வீழ்த்தி 3- வது சுற்றுக்குள் நுழைந்தார். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 2-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் அமெரிக்க நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்சும், கஜகஸ் தான் வீராங்கனையும் மோதினர். 

இந்தப் போட்டியில் உலக நம்பர் - 1 வீராங்கனையான செரீனா அபாரமாக ஆடி 6-3, 6-0 என்ற கணக்கில்  வெற்றி பெற்றார்.  

மற்றொரு ஆட்டம் ஒன்றில், ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர் 6-3, 6-7, 6-1 6-2 என்ற செட் கணக்கில் சகநாட்டின் பட்டிஸ்டாவை தோற்கடித்தார். 

டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 6-2 என்ற செட் கணக்கில் தெ.ஆ. வீராங்கனை ஷெப் பர்ட்சை தோற்கடித்தார். 

ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலின் ஹெ ர்பர் 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் யூவ்ஜெனியை வென்றார். 

பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 6-3, 6-1 என்ற செட் கணக்கி ல் கனடா வீராங்கனை அலெக்சாண்ட்ரியாவை வென்றார். 

செர்பிய வீராங்கனை அனா இவா னோவிக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ருமேனியாவைச் சேர்ந்த அலெக்சாண் ட்ரா டுல்ஹெருவை வென்றார். 

செக். குடியரசின் பெட்ரா விட்டோ வா 6-2, 6-4 என்ற கணக்கில் செர்பியா வின் போசனா சனோவஸ்கியை தோ ற்கடித்தார். 

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி மற்றும் பெட்டிஸ்னர் ஜோடி 3-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் கனடா வின் டேனியல் நெஸ்டர் மற்றும் போ ஸ்பிசில் இணையிடம் தோல்வி அடைந்தது. 

லியாண்டர் பயஸ் மற்றும் ஸ்டீபானிக் ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கி ல் பின்லாந்தின் நெமியன் மற்றும் டிமி ட்ரி சுனோ இணையை வீழ்த்தியது. 

இந்தியாவின் டிவிஜ் ஷரன் மற்றும் செ ன்சன் லூ ஜோடி 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஹாலந்தின் ராபின் ஹஸ்சே மற்றும் இகோர் சிசிலிங் இணையை தோற்கடித்தது. 

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ஹெங்க் (சீனா) ஜோடி 6-2 , 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அனிகா பெக் மற்றும் பியூட்டோரிகா வின் மோனிகா இணையை வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்