முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவநீதம் பிள்ளையின் குற்றச்சாட்டு: விசாரணைக்கு தயார்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, செப். 3 - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தத் தயார் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. நவநீதம் பிள்ளை செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைத்தீவில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு சமீபத்தில் நான் செல்வதற்கு முன்பும் பின்பும் ராணுவம் மற்றும் போலீசார் சென்றதாக எனக்கு தகவல் வந்ததது என்றும் அவர் குறை கூறியிருந்தார். இந்நிலையில், நவநீதம் பிள்ளை எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தத் தயார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கேஹலிய ரம்புக்வெல்லா, கொழும்பில் செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 

இந்த விசாரணையை நடத்த வேண்டுமானால், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நவநீதம் பிள்ளையின் அலுவலகம் வழங்க வேண்டும். அவரிடம் பேசிய நபர்களை அச்சுறுத்துவதன் மூலம் அரசின் நற்பெயரைக் குலைக்க சில அமைப்புகள் முயற்சிக்கலாம். இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து, தாம் விரும்பும் யாரையும் சந்திக்க நவநீதம் பிள்ளைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்றார் கேஹலிய ரம்புக்வெல்லா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்