முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடி: கைதான உமா மீது மேலும் 5 பேர் புகார்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.12 - ரூ.150 கோடி நிலமோசடி வழக்கில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உறவினர் உமா மகேஸ்வரி மீது செங்கல்பட்டை அடுத்த அம்மனப்பாக்கத்தை சேர்ந்த உமாபதியின் மனைவி தனலட்சுமி மற்றும் மகன்கள் கந்தசாமி, ரவிக்குமார், உதயகுமார், சேகர் ஆகியோர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எங்களது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் 1957-ம் ஆண்டில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அடபள்ளி கந்தசாமி செட்டி அறக் கட்டளைக்கு சொந்தமான இடத்தில் லீசுக்கு வந்தோம். நாங்கள் அனைவரும் அங்கு தனித்தனியாக வீடுகள் கட்டி குடியிருந்தோம்.

எங்களைப் போல 150 குடும்பத்தினரும் அங்கு வசித்து வந்தனர். இந்த நிலையில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் உறவினரான ஆர்ஜிட் பவுண்டேசன் இயக்குனர் உமா மகேஸ்வரி இந்த இடத்தை வாங்கினார். பின்னர் அங்கு குடியிருந்தவர்களை காலி செய்யும் பணியில் அவர்கள் ்டுபட்டனர்.ரூ. 40 லட்சம் பணம் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி எங்களை காலி செய்ய வற்புறுத்தினர். இதில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு அவர்கள் கூறியபடி ரூ.40 லட்சம் பணம் கொடுத்தனர்.

ஆனால், எங்கள் 5 பேருக்கும் ரூ. 9 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு காலி செய்ய சொன்னார்கள். இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். இதையடுத்து எங்களை மிரட்டி காலி செய்ய வைத்ததுடன் புல்டோசர் மூலம் வீடுகளையும் இடித்து தள்ளினர். எனவே ஆர்ஜிட் பவுண்டேசன் இயக்குனர்களான உமா மகேஸ்வரி, அஜய் ஆனந்த் ரெட்டி, வெங்கட சுப்பிரமணியன், சீனிவாசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நில மோசடி தொடர்பாக அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உமா மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் சதீஷ் ஆனந்த் ரெட்டி என்பவர் மட்டும்  ஜாமீனில் விடுதலையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்