முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடன்பாடு: மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் வாபஸ்

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.28 - அமைச்சர் வளர்மதி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் வாபஸ்  மாற்று திறனாளிகள் தங்களது போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றார்கள். உண்ணாவிரதம் இருந்த மாற்று திறனாளிகளை நேற்று அமைச்சர் பா.வளர்மதி சந்தித்து பேசிய பின் மாற்று திறனாளிகள்  தங்களது உண்ணவிரத போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தார்கள். அவர்களுக்கு அமைச்சர் பா.வளர்மதிபழச்சாறு கொடுத்தார். 

தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்றவர்கள் ஆசிரியர் களாக தகுதி பெற 40  மதிப்  பெண்களை குறைந்த பட்ச மதிப்பெண் களாக நிர்ணயிக்க வேண்டும். மேலும் தமிழக அரசின் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வை யற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும்  போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை யற்ற மாற்றுத் திறனாளிகள்   போராட் டம் நடத்தி வந்தனர். கே.கே. நகர் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். 

அவர்களை போலீசார் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவர்கள் எந்தவித மருத்துவ சிகிச்சையும் எடுக்காமல் மருத்துவ மனையின் உள்ளேயே உண்ணாவிரதபோராட்டத்தை தொடர்ந்தனர். இதைதொடர்ந்து  அவர்களை   அமைச்சர் பா.வளர்மதி, மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் சிவசங்கரன், கமிஷனர் ஜெயக்கொடி ஆகியோர்  நேரில் சந்தித்து பேசினார்கள்.  ஆனால் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்துவிட்டனர். 

இந்த நிலையில்  நேற்று சென்னை கோட்டையில் மாற்று திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பா. வளர்மதி பேச்சு நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் பா. வளர்மதி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று அங்கு உண்ணாவிரதம் இருந்த மாற்று திறனாளிகளுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்