முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியட்நாமில் வெள்ளம்: 2.5 லட்சம் வீடுகள் பாதிப்பு

புதன்கிழமை, 2 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

ஹனோய், அக்.3 - மத்திய வியட்நாமில் ஏற்பட்ட சூறாவளி, வெள்ளத்தால் 2.5 லட்சம் வீடுகள் சரிந்தன. ஒரு சிறுவன் உள்பட மூவர் உயிரிழந்தனர். 26 பேர்  காயமடைந்தனர். இதுபற்றி வியட்நாம் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

சூறாவளி 105 கி.மீ. வேகத்தில் வீசியது. இதில் குவாங்பிங்க் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தான். இருவர் சூறாவளியில் சிக்கி இறந்தனர். 70 மீனவர்களைக் காணவில்லை. 26 பேர் காயமடைந்துள்ளனர். 

சூறாவளிக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளத்தால் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் சரிந்தன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பபிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாயின. சீனாவிலும் சூறாவளி தாக்கியதில் 70 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளள பெருக்கில் 23 பேர் இறந்தனர். 15 ஆயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்