முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

ஸ்டாக்ஹோம், அக். 11 - பொருள்களின்வேதியியல் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை கணிணி மூலம் உருவகப்படுத்தும் சிமுலேஷன் முறையை கண்டறிந்த மார்ட்டின் கார்ப்லஸ்(83), மைக்கேல் லெவிட்(66), ஏரியே வார்ஷெல்(72) ஆகிய மூன்று மூலக்கூறு விஞ்ஞானிகள் வேதியியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து நோபல் பரிசுக்கான நடுவர் குழு தெரிவிக்கும் போது, சிக்கலான வேதியியல் செயல்முறைகளை பல அடுக்கு மாதிரிகள் மூலம் எளிமைப்படுத்தி விளக்கும் செயல்முறையை உருவாக்கியதற்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர்கள் உருவாக்கி உள்ள செயல்முறை மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன. நவீன வேதியியலுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று. 

இந்த செயல்முறையை அடிப்படையாக கொண்டு அனைத்து வேதியியல் துறைகளும் பயன் பெறும் என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பின் சிறப்பம்சம். சூரிய தகடுகளை திறனேற்றம் செய்வது, வாகனங்களின் செயல்திறனை அதிகரிப்பது, மருந்துகள் தயாரிப்பது போன்ற பல்வேறு துறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் வேதியியல் விஞ்ஞானிகளுக்கு இவர்களது கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமையும் என்று நடுவர்கள் தெரிவித்துள்ளனர். பரிசு தொகையான 12.5 லட்சம் டாலரை மூவரும் பகிர்ந்து கொள்வார்கள். டிசம்பர் 10 ம் தேதி ஸ்டாக்ஹோமில் பாரம்பரிய முறைப்படி நடைபெறவிருக்கும் விழாவில் இம்மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony