முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய இளைஞருக்கு ஐ.நா. விருது

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், அக். 13 - இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான ஐ.நா. விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா. அமைப்பை சேர்ந்த சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன் உலக அளவில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப மின்னணு தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்களுக்கான போட்டியை சமீபத்தில் நடத்தியது. 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கான இப்போட்டிக்கு உலகம் முழுவதிலும் உள்ள 88 நாடுகளில் இருந்து சுமார் 600 கண்டுபிடிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் இருந்து தொழில் வெற்றிக்கு அடிப்படையாகவும், சமுதாயத்துக்கு பயனுள்ளதாகவும் இருக்க கூடிய 10 கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 

அதில் இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா என்பவர் உருவாக்கிய திறந்த வெளி பாடத்திட்டமும் ஒன்று. தொடக்க நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு பயன்படும் வகையில் ஆன்லைன் முறையிலான பாட திட்டங்களை இவர் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை தவிர உகாண்டா, வியட்னாம் உட்பட பல நாடுகளை சேர்ந்த மேலும் 9 பேர் இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பாங்காக்கில் நடைபெறவிருக்கும் ஐ.டி.யூ. டெலிகாம் வேர்ல்டு 2013 மாநாட்டில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago