முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

ருமாங்கோவா, அக். 15 - காங்கோ நாட்டில் ஐ.நா. ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்.  ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக போராடும் தீவிரவாதிகள் பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். எனவே தீவிரவாதிகளை ஒடுக்க ஐ.நா. சபை அமைதிப்படையை அனுப்பி உள்ளது. அவர்கள் கடந்த 18 மாதங்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். 

அரசு படையினர் தவிர ஐ.நா. அமைதிப் படையும் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் பறந்த ஐ.நா. அமைதிப் படை ஹெலிகாப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்தவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. பொதுமக்களை பாதுகாக்கும் அனைத்து பணிகளிலும் ஈடுபடுவோம். தேவைப்பட்டால் படைகளையும் பயன்படுத்துவோம் என்று காங்கோவின் ஐ.நா. தூதரக தலைவர் மார்ட்டின் கோப்லர் கூறினார். இதனிடையே அரசு மற்றும் ஐ.நா. படை வீரர்கள் தாக்குதல் நடத்த வருவதாக கருதி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினோம் என்று தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago