முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை முதல்வராக ரங்கசாமி இன்று பதவி ஏற்கிறார்

திங்கட்கிழமை, 16 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, மே.- 16 - புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் இந்த கூட்டணி 20 தொகுதிகளை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களையும், அ.தி.மு.க. 5 இடங்களையும் பிடித்தது. இதையொட்டி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுவையில் புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.  என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் தலைவர் ரங்கசாமியுடன் சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு இரவு புதுவை திரும்பினர்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சட்டசபை தலைவரை தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று காலை புதுவையில் அண்ணாமலை ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு ரங்கசாமியும் தலைமை தாங்கி னார். இதில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த சுயேட்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமாரும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 10 நிமிடம் மட்டுமே நடந்தது. அதில் சட்டசபை தலைவராக ரங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து ரங்கசாமி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து பேசினார்.
அப்போடு சட்டசபை என்.ஆர்.காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தையும், சுயேட்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமார் ஆதரவளித்து கொடுத்த கடிதத்தையும் கவர்னரிடம் கொடுத்தார்.
பின்னர் ஆட்சி அமைக்க அழைப்ப விடுக்கும் படி உரிமை கோரினார். கவர்னர் இந்த கடிதங்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார். இன்று(16-ந் தேதி) மதியம் 2 மணிக்கு ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்கிறார். கவர்னர் மாளிகை வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. ரங்கசாமி மட்டும் இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்.
அமைச்சர்கள் வேறு நாளில் பதவி ஏற்கின்றனர்.
ரங்கசாமி நேற்று கவர்னரை சந்தித்த போது கூட்டணி கட்சியான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் செல்லவில்லை. ரங்கசாமி அ.தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ரங்கசாமி விரைவில் ஜெயலலிதாவை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். அதன் பிறகு தான் கூட்டணி ஆட்சி பற்றி தெரிய வரும்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago