முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை கூட்டத்தை கூட்ட கவர்னருக்கு கோரிக்கை

புதன்கிழமை, 18 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.19 - கர்நாடக சட்டசபையை வருகின்ற ஜூன் 2-ம் தேதி கூட்ட வேண்டும் என்று கவர்னர் பரத்வாஜை முதல்வர் எடியூரப்பா மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா அரசு இருக்கிறது. இந்த அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி மத்திய அரசுக்கு கவர்னர் பரத்வாஜ் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனையொட்டி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 121 பேர் சேர்ந்து எடியூரப்பாவுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் முன்பு அணிவகுப்பு நடத்தினர். பின்னர் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று பெங்களூர் திரும்பினர். பெங்களூருக்கு புறப்படுவதற்கு முன்பு முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் என் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தின்போது சட்டசபையை கூட்ட வேண்டும் என்று கவர்னருக்கு சிபாரிசு செய்துள்ளோம். தற்போது சட்டசபையை கூட்ட வேண்டும் என்று கவர்னர் பரத்வாஜை நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். கவர்னர் பரத்வாஜை நான் விரைவில் சந்திப்பேன். அப்போது சட்டசபையை அமைச்சரவை சிபாரிசு செய்தபடி வருகின்ற ஜூன் 2-ம் தேதி கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்வேன். சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இரண்டு முறை கவர்னர் பரத்வாஜை கேபினட்  அமைச்சரவை கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. சட்டசபையில் எடியூரப்பா அரசு மீது முதலில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரியபோது அவருக்கு எதிராக கிளம்பிய 16 எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் போப்பையா பறித்தது பற்றி கேட்கப்பட்ட்தற்கு பதில் அளிக்க எடியூரப்பா மறுத்துரிட்டார். நான் எதுவும் சொல்லத்தேவையில்லை என்றும் எடியூரப்பா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago