முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ கல்லூரியில் ராக்கிங் செய்தவர்கள் சஸ்பெண்டு

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 8 - சென்னை மருத்துவ கல்லூரியில் ராக்கிங் செய்த 17 மாணவர்கள் ஒரு ஆண்டு க்கு  சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மருத்துவ கல்லூரி (எம்.எம்.சி.)யில் 700 மாணவ_ மாணவிகள் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை 165_ல் இருந்து 250 ஆக உயர்ந்தது. அதன்படி 142 மாணவர்களும், 108 மாணவிகளும் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் வகுப்பு தொடங்கியது.

முதலாம் ஆண்டு மாணவ_மாணவிகளை 2 மற்றும் 3_ம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்ய தொடங்கினர். கல்லூரி விடுதி மற்றும் வகுப்பறையில் கேலி செய்ய தொடங்கினர்.

மாணவர்களின் ராக்கிங் தொடர்ந்து நடந்து வந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவ_மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த மாணவர்களை ராக்கிங் கண்காணிப்பு குழு ரகசியமாக கண்காணித்தது. இதில் முதலாம் ஆண்டு மாணவ_மாணவிகளை ராக்கிங் செய்வது உறுதியானது.

இதைத் தொடர்ந்து சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் வே.கனகசபை அதிரடி நடவடிக்கை எடுத்தார். எம்.பி.பி.எஸ். படிப்பு முடியும் வரை 12 மாணவர்களை விடுதியில் இருந்தும், 5 மாணவர்களை ஒரு ஆண்டுக்கு விடுதி மற்றும் வகுப்பில் இருந்தும் 'சஸ்பெண்டு' செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறியதாவது:_

முதலாம் ஆண்டு மாணவ_மாணவிகளை ராக்கிங் செய்யக்கூடாது என சீனியர் மாணவர்களுக்கு பலமுறை அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி ராக்கிங்கில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளோம். ராக்கிங்கை தடுக்க கல்லூரி மற்றும் விடுதியில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதையும் மீறி முதலாம் ஆண்டு மாணவ_மாணவிகளை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 17 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

இதே போல கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட ஒரு மாணவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் சஸ்பெண்டு விலக்கப்பட்டு வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago