முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிரான குழு அமைக்க தயார்: ஸ்ரீரவிசங்கர்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, டிச. 16 - ஊழலை எதிர்க்க இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இதற்கென வாழும் கலை மையத்தில் ஊழலுக்கு எதிரான குழு ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறினார். 

மதுரையில் வாழும் கலை மையம் சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற பக்தர்களுடனான நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது _ மனம் தூய்மையானதாக இருந்தால் எண்ணங்களும் செயல்பாடுகளும் சிறப்பானதாக இருக்கும். பொது சேவைகள் மூலம் பிறர் துன்பத்தை போக்குவது என்ற கொள்கையை வகுத்துக் கொண்டால் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி என்பது கைகூடும். 

நமது மனதைக் தூய்மையாக்கி, எண்ணங்களை ஒரு நிலைப்படுத்த தியானமும், பிரணாயாமப் பயிற்சியும் சிறந்தது. நமது மூளைக்கு நிமிடத்துக்கு 40கோடி தகவல்கல் உணரப்படுகின்றன. 

இதில் 40 தகவல்கள் மட்டுமே பகுத்து அறியப்படுகிறது. தியானப் பயிற்சியைத் தொடருவதன் மூலமாக அத்தகைய செயல்பாடுகளை மேலும் செம்மையாக்கிக் கொள்ள முடியும். 

நமது பழங்கால சம்பிரதாயங்கள் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றன. மனிதனின் வாழ்வியலுக்காக ஏற்படுத்தப் பட்ட இவற்றில் இன்றைய சூழலுக்கு சில சம்பிரதாயங்கள் ஒத்து வராது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. 

அதற்காக நமது சம்பிரதாயங்களை ஒதுக்கி விட முடியாது. மணலில் சர்க்கரை கலந்து விட்டால் அதை மணல் என்று தூக்கி எறிந்து விடவோ, சர்க்கரை என்று வைத்துக் கொள்ளவோ முடியாது. 

தண்ணீரில் கலந்து சர்க்கரையைப் பிரிப்பது போல வாழ்க்கைக்குத் 

 தேவையான விஷயங்களை பிரித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஜாதி, மதங்களின் பெயரால் மக்களிடையே பேதங்களை ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வது சமூகத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். 

வன்முறை, பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு மதுப் பழக்கம் தான் முக்கிய காரணம். 

மதுவிலக்கை அமல்படுத்துவதும் மதுவால் தீய செயல்களுக்கு அடிமையானவர்களுக்கு தியானப் பயிற்சியின் மூலம் மன மாற்றத்தை ஏற்படுத்துவதும் இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமானது. 

அடுத்ததாக ஊழல் என்பது வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடையாக இருக்கிறது. இவற்றை யெல்லாம் இளைஞர்கள் எதிர்க்க வேண்டும். 

ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் ஒன்றி+

ணந்தால் அதற்கென தனிப் பிரிவை வாழும் கலை மையம் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony