முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 17 - ஆலந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி   பிரவீண்குமார்  கூறியுள்ளார். தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னை கோட்டையில் நேற்று  செய்தியாளர்களிடம் கூறியதாவது:_ தலைமை தேர்தல் கமிஷனுக்கு தென் மாநிலத்தில் துணைக் குழு உள்ளது. 5 மாநில தேர்தல் அதிகாரிகளைக் கொண்ட இந்த துணைக் குழு இன்று சென்னையில் கூடி ஆலோசனை நடத்தியது.

பாராளுமன்றத்துக்கு தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்படும்போது இந்த துணைக்குழு கூட்டப்படுவது உண்டு. அதன்படி இன்றைய கூட்டம் நடக்கிறது.

பாராளுமன்றத் தேர்தலில் அதிகாரிகள், ஏஜெண்டுகள் எப்படி செயல்பட வேண்டும் என்று கையேடு உள்ளது. அந்த கையேடு குறிப்புகளை திறம்பட செயல் படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம்.

மேலும் அந்த கையேட்டில் புதிய வழிகாட்டி நெறி முறைகளை சேர்ப்பது பற்றியும் ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக வாக்காளர் பட்டியல் பற்றியும், புதிய வாக்காளர்களை சேர்ப்பது பற்றியும் பேசினோம்.

தமிழ்நாட்டில் ஜனவரி 6_ந்தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்று வாக்காளர்கள் சரி பார்த்து கொள்ளலாம்.

மேலும் 18 வயது பூர்த்தியானவர்கள் அந்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளலாம். அதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும்.

கேள்வி:_ ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் எப்போது நடத்தப்படும்?

பதில்:_ ஆலந்தூரில் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அங்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

இது தொடர்பாக நாங்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருடன் பேசி உள்ளோம். தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவோம்.

கேள்வி:_ பாராளுமன்ற தேர்தலுடன் ஆலந்தூர் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுமா?

பதில்:_ இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்.

இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony