முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மீனவர்கள் 50 பேரின் காவல் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, டிச. 18 - புதுக்கோட்டை மீனவர்கள் 50 பேரின் காவலை இலங்கை நீதிமன்றம் செவ்வாய்கிழமை (இன்று) மீண்டும் டிசம்பர் 30 வரை நீட்டித்து உத்திரவிட்டது.

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினம் பகுதியை சேர்ந்த ஆனந்த், குமரேசன், குரளரசன, முத்தையா ஆனந்த் உள்ளிட்ட 20 மீனவர்கள் கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 20 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு 5 விசைப் படகுகளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 20 பேரையும் இலங்கை காங்கேசன் துறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.நவம்பர் 21ம் தேதி மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள், யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதே போன்று கடந்த டிசம்பர் 12ம் தேதி அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 50 பேரின் காவல் செவ்வாய்கிழமை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்களை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்கள் 50 பேருக்கும் டிசம்பர் 30ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 50 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago